Akshaya Patraவின் பங்களிப்பு

கர்நாடகாவின் பெங்களூரில் 5 அரசுப் பள்ளிகளில் 1,500 குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு வழங்குவதுடன் ஜூன், 2000ல் Akshaya Patra ஃபௌண்டேஷன் மதிய உணவுத் திட்டத்தைத் தொடக்கியது. கடந்த 13 ஆண்டுகளில், பல்வேறு மாநில அரசுகள் மற்றும் இணைந்துள்ள நிறுவங்களிலிருந்து கிடைக்கும் உதவியுடன் சேர்ந்து இந்திய அரசும் தொடர்ச்சியாக அளிக்கும் ஆதரவானது  திட்டம் விரைவாக வளர்வதை இயலச்செய்தது. இன்று, இந்த நிறுவனம் 1.6 மில்லியன் பள்ளிக் குழந்தைகளுக்கு 13,839 அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவு வழங்கி வருகிறது. இந்த ஃபௌண்டேஷன் தற்போது இந்தியாவில் 9 மாநிலங்களில் 33 இடங்களில் தனது இருப்பை நிலைநாட்டியுள்ளது. Akshaya Patra ஃபௌண்டேஷன் உலகின் பெரிய என்.ஜி.ஓ நடத்தும் மதிய உணவு த்திட்டமாக கெளரவிக்கப்பட்டுள்ளது (ஆதாரம்).

millenium-declaration-tamil

மதிய உணவு திட்டத்தை  செயல்படுத்துவதில் Akshaya Patraவின் பங்கு பள்ளி மதிய உணவினை வழங்குவதற்கும் மேலானது. இந்தத் திட்டத்தின் மூலம், நிறுவனம், இரண்டு முக்கியமான ஆயிரம் ஆண்டுகால மேம்பாட்டு இலக்குகளை அடைவதற்கு எண்ணியுள்ளது: பசியை அகற்றுவது மற்றும் அடிப்படைக் கல்வியை எல்லோருக்கும் பரப்புவது.

vision-of-akshaya-patra-tamil

இந்த இலாபநோக்கற்ற நிறுவனம் ’இந்தியாவிலுள்ள சிறுவர்கள் எவருமே பசி காரணமாக கல்வியை இழந்துவிடக் கூடாது’ என்கிற அதன்  கனவை நோக்கிப் பணிபுரிகிறது. இக்கனவை அடைவதற்காக, Akshaya Patra ’கல்விக்காக கட்டுப்பாடில்லா உணவை வழங்குகிறது’. இந்த முழுமையான உணவு பெரும்பாலும், ஒரு நாள் முழுமைக்குமான ஊட்டச்சத்து ஆதாரமாகும்.  இவ்வாறு, ஒவ்வொரு குழந்தையும் இந்த ஒரு சாப்பாட்டினால் பலனடைவதை உறுதி செய்வதற்காக, உள்ளூர் சுவைக்கும் பொருந்துகிற ஊட்டச்சத்து மிக்க உணவை Akshaya Patra தயாரிக்கிறது. உதாரணத்துக்கு, வட பகுதிகளில் இருக்கும் சமையலறைகள் சப்பாத்திகளை பரிமாறுகின்ற அதே சமயம் தென் பகுதிகளில் சாதத்தைப் பரிமாறுகின்றன.

ஃபௌண்டேஷன் இரண்டு வெவ்வேறு சமையலறை மாதிரிகளை நடத்துகிறது    மையப்படுத்தப்பட்டது மற்றம் பரவலாக்கியது.

மையப்படுத்தப்பட்ட சமையலறை ஒரு  பெரிய  தொழிற்சாலை போன்ற சமையலறைத்  தொகுதிகளைக் கொண்டது, அது ஒரு நாளைக்கு 100,000 வரையான உணவுகளை தனிச் சிறப்பாகச் சமைக்கும் திறனைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சமையலறையும்  தொழிற்சாலையைச் சுற்றியுள்ள பள்ளிகளின் ஒரு தொகுதிக்கு பரிமாறுகிறது. இந்தத் தொழிற்சாலைகள் பகுதி தானியங்கியாக உள்ளன, ஆகவே இவை சமைக்கும் செயல்முறையில் சுகாதாரத்தை உறுதிசெய்கின்றன.   மையப்படுத்தப்பட்ட சமையலறைகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமும்  செயல்முறையும், ஹார்வர்டு போன்ற பிரபல பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சித் தலைப்பாகவும் பாடத்திட்டத்தின் ஆய்வாகவும் இருக்கின்றன (ஆதாரம்).

மாறுபட்ட புவியியல் நிலப்பரப்பகளும் முறையற்ற சாலை இணைப்பும் பெரிய உட்கட்டமைப்பின் கட்டுமானத்திற்கு உதவாத இடங்கலில் ஒரு பரவலாக்கிய சமையலறை மாதிரியே  பொருத்தமான அமைப்பாகும். பரவலாக்கப்பட்ட சமையலறைப் பிரிவுகள் மகளிர் சுய உதவிக் குழுக்களால் Akshaya Patraவின் சமையலறை செயல்முறை மற்றும்  நடவடிக்கைத் தொகுதிகளின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் நடத்தப்படுகின்றன.

குழந்தை சுகாதாரப் பிரிவில் பல்வேறு மதிப்புமிக்க நிறுவனங்களால் நடத்தப்பட்ட கருத்தாய்வுகளின்படி, நமது நாட்டின் மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் 18 வயதுக்குக் கீழுள்ளவர்கள்.  இவர்களில் 50 சதவீதத்துக்கும் குறைவானவர்கள் பள்ளிக்கு செல்கின்றனர்.  பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலைகள் இந்தக் குழந்தைகளை, ஒரு நாளைக்கு ஒருவேளை சாப்பாட்டுக்காக, கல்வியை விட வீட்டு வேலைகளைத் தேர்ந்தெடுக்குமாறு நிர்பந்திக்கின்றன. நடப்பிலிருக்கும் பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக உலகில் கல்வி பின்தங்கி இருப்பதாக ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. இந்த இரண்டு காரணிகளும் பள்ளி சேர்க்கைகளையும் குறைக்கின்றன, செயல்பாட்டு அளவுகளைத் தடுக்கின்றன மற்றும் பள்ளியிலிருந்து விலகும் வீதங்களை அதிகரிக்கின்றன, குறிப்பாக பெண் குழந்தைகளில். பசி, குறிப்பாக வகுப்பறை பசி குழந்தைகள் பள்ளிக்கு சென்றாலும் அவர்களின் செயல்பாட்டில் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இந்த சூழ்நிலையில், குழந்தைக் கல்வியில் என்.ஜி.ஓக்களின் பங்கு தவிர, மதிய உணவுத் திட்டம் ஒரு பெரும் ஊக்கத் தொகையாக குழந்தைகளைப் பள்ளிக்கு  அழைத்து வருகிறது. அது குழந்தைகளை வேலை செய்ய விடாமல் தடுக்கிறது, மாறாக படிக்கவும் கல்வி பெறவும் ஊக்குவிக்கிறது. இந்த வகையில் திட்டம் அடிப்படைக் கல்வியை எல்லோருக்கும் பரப்புவதற்கு உதவுகிறது.

தரம் என்று வரும்போது. Akshaya Patra ஃபௌண்டேஷன் சமாதானம் செய்து கொள்வதில்லை. சுகாதாரமும் துப்புரவும் ஒவ்வொரு Akshaya Patra சமையலறையிலும் முக்கியமானதாகும், அது மையப்படுத்தியதாக இருந்தாலும் சரி, பரவலானதாக இருந்தாலும் சரி. இந்த இலாப நோக்கத்திற்காக அல்லாத நிறுவனத்தின் பணி தேசிய வழிகாட்டு மற்றும் கண்காணிப்புக் குழுவால் (என்.எஸ்.எம்.சி) மதிய உணவுத் திட்டத்திற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த பொது –தனியார் கூட்டாண்மையின் வெற்றி பெரிய அளவில் பாராட்டப்படுகிறது மற்றும் கடைப்பிடிப்பதற்கு மாதிரி கூட்டாண்மை மதிப்புமிக்கதாக கருதப்படுகிறது. தி குளோபல் ஜர்னல் மூலம், உலகளவில் முதன்மையான 100 என்.ஜி.ஓக்களில் 23வது இடத்தில் தரமிடப்பட்டுள்ளதன் மூலம் உலகளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது.

 

 

The Best Way to Make a Difference in the Lives of Others