Akshaya Patra சமையலறைஉட்கட்டமைப்பு
Akshaya Patra ஃபௌண்டேஷன் இந்தியாவிலுள்ள 9 மாநிலங்களில் பரந்துள்ள 20 இடங்களில் இயங்குகிறது.
மையப்படுத்திய சமையலறைகள் பெரிய சமையலறைப் பிரிவுகள், அவை 100,000 வரையான உணவுகளை சிறப்பான முறையில் சமைக்கும் கொள்திறன் உடையவை. இந்த சமையலறைகள் அப்பிரிவைச் சூழ்ந்து அமைந்துள்ள பள்ளிக்கூடங்களின் தொகுதிக்கு சேவையாற்றுகின்றன. அவை தானியக்கமாகச் செயற்படுபவை, ஆகவே சமையல் நடவடிக்கைகளின் போது சுகாதாரத்தை உறுதிப்படுத்துகின்றன. இன்னொரு வகையில் கூறினால், பெரிய உட்கட்டுமானத்தைக் கட்டியெழுப்புவதற்கு கடினமான புவியியல்சார் நிலப்பரப்பு மற்றும் ஒழுங்கில்லாத சாலை இணைப்பு போன்ற காரணிகள் ஆதரவளிக்காத இடங்களில் பரவலாக்கிய சமையலறை வடிவம் மிகச்சிறந்த தீர்வாகும். இச்சமையலறைகள் Akshaya Patra இன் சமையலறைச் செயலாக்கம் மற்றும் நடவடிக்கைகள் பிரிவின் வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையின் கீழ் பெண்கள் சுய உதவிக் குழுக்களால் (எஸ்.எச்.ஜிகள்) நடத்தப்படுகின்றன.
Akshaya Patra சமையலறைகள் சிக்ஸ் சிக்மா செயல்முறைகளை மேற்கொண்டுள்ளன.
மையப்படுத்திய பிரிவுகளில் சமையல் அதிகாலையிலேயே தொடங்கிவிடுகிறது. நிறுவனத்தால் இயக்கப்படும் அனைத்துச் சமையலறைகளும் ஒரு திட்ட அட்டவணையிட்ட மெனுவைப் பின்பற்றுகின்றன. எல்லா மையப்படுத்திய சமையலறைகளிலும் அண்டாக்கள், தள்ளுவண்டிகள், ரைஸ் சூட்கள், பருப்பு/சாம்பார் டேங்குகள், வெட்டும் பலகைகள், கத்திகள் மற்றும் பயன்படுத்த முன்னர் துப்புரவு செய்யப்படுகின்ற இதேபோன்ற பிற உபகரணங்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. வட இந்திய சமையலறைகலில் சாத அண்டாக்களும் பருப்பு அண்டாக்களும் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு சாத அண்டாவும் குறைந்தது 500 லிட்டர் கொள்ளளவு உடையவை; மேலும் ஒவ்வொரு பருப்பு அண்டாவும் 1,200 லிட்டர்கள் முதல் 3,000 லிட்டர்கள் வரையான பருப்பைச் சமைக்கக் கூடிய கொள்ளளவு உடையவை. வட இந்திய மெனுவின் முக்கிய பாகமாக சப்பாத்தி இருப்பதால், சமையலறைகளில் சப்பாத்தி செய்கின்ற இயந்திரங்கள் பொருத்தப்படுகின்றன. இவை 6,000 கி.கி கோதுமை மாவிலிருந்து 2,00,000 சப்பாத்திகளை உருட்டக் கூடிய கொள்திறம் உடையவை.
தென்னிந்திய சமையலறைகலில் சாத அண்டாக்களும் சாம்பார் அண்டாக்களும் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு சாத அண்டாவும் குறைந்தது 500 லிட்டர் கொள்ளளவு உடையவை; மேலும் ஒவ்வொரு சாம்பார் அண்டாவும் 1,200 லிட்டர்கள் முதல் 3,000 லிட்டர்கள் வரையான சாம்பாரைச் சமைக்கக் கூடிய கொள்ளளவு உடையவை. எல்லா பாத்திரங்களுமே ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல் 304 உணவுத் தர உலோகத்தால் செய்யப்பட்டவை.
மூலப் பொருட்களைச் சேகரிக்கும் போது தர உறுதி
எஸ்.க்யூ.எம்.எஸ் செயலாக்கம் ஆனது, சரியான மற்றும் மிகச்சிறந்த மூலப் பொருட்கள் சேகரிக்கப்படுவதை உறுதிசெய்வதற்காக சப்ளையர் தேர்வு, சப்ளையர் தகைமை, சப்ளையர் தரமதிப்பீடு போன்ற துணைச் செயல்களை உள்ளடக்குகிறது. எங்கள் தரக் கட்டுப்பாட்டுச் செயலாக்கம் ஆனது, பொதுவாக உணவுப் பாதுகாப்புத் தரநிலைகள் சட்டம் 2006 (எஃப்.எஸ்.எஸ்.ஏ) இலிருந்து எடுக்கப்பட்டு, பின்பற்றப்படும் எங்கள் மூலப் பொருள் விவரக்குறிப்புகளின் எல்லா தேவைகளையும் நிறைவு செய்யும் பொருட்டு, முழுமையான தர ஆய்வு செய்த பின்னர் மட்டுமே மூலப் பொருட்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன என்பதை உறுதிசெய்கிறது.
மூலப் பொருட்களைக் களஞ்சியப்படுத்தல், கையாளுதல், பதப்படுத்தல்
தினசரி அடிப்படையில் புதிய காய்கறிகள் தேடி வாங்கப்படுகின்றன. தேடி வாங்கிய பிறகு, மிகச் சிறந்த தரத்தைப் பேணுவதற்காக காய்கறிகள் வகைப்படுத்தப்படும். வெட்டுவதற்கு முன்னர் எல்லா காய்கறிகளும் குடிக்கத்தக்க தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டு, துப்புரவு செய்யப்படுகின்றன. புதிதாக இருக்கும் தன்மையை அப்படியே தக்க வைப்பதற்காக சமைக்கத் தயாராக வெட்டிய காய்கறிகளைச் சேமிக்க குளிர் சேமிப்பு முறை பயன்படுத்தப்படும். அரிசியை இந்திய உணவுக் கழகம் (எஃப்.சி.ஐ) வழங்குகிறது. சமைக்கத் தொடங்கும் முன், அரிசி இயந்திரத்தில் முழுமையாகச் சுத்தம் செய்யப்பட்டு, கழுவப்படும். எல்லா மூலப் பொருட்களும் புதிதாக இருப்பதை உறுதிசெய்யும் பொருட்டு, தயாரிப்பிற்காக மூலப் பொருட்களை வழங்குகையில், எல்லா சமையலறைகளும் எஃப்.ஐ.எஃப்.ஓ (ஃபர்ஸ்ட் இன் ஃபர்ஸ்ட் அவுட்) மற்றும் எஃப்.ஈ.எஃப்.ஓ (ஃபர்ஸ்ட் எக்ஸ்பயரு ஃபர்ஸ்ட் அவுட்) முறைகளைப் பின்பற்றுகின்றன.
இவ்வாறு செய்வதால், சமையலறைகளால் ஒரு பொருத்தமான முறையில் மூலப் பொருட்களை சரியாக அடையாளங்கண்டு, சேமித்து மற்றும் மீட்டெடுக்கக் கூடியதாக உள்ளது.
சமைக்கும் போது தரம் மற்றும் பாதுகாப்பு
Akshaya Patra இன் எல்லா சமையலறைகளுமே மதிய உணவுகளைத் தயாரிப்பதற்கு ஒரு தரநிலையான செயலைப் பின்பற்றுகின்றன. இச்செயலானது சமைத்த உணவின் சுகாதாரத்தையும் தரத்தையும் உறுதிசெய்வதற்கும், அதோடு உணவுப் பாதுகாப்புத் தரநிலைகளிற்கு இணங்க ஒழுகுவதற்கும் கூட விளக்க வரைபடத்தில் திட்டமிடப்படுகிறது. அண்டாக்கள், தள்ளுவண்டிகள், ரைஸ் சூட்கள் மற்றும் பருப்பு/சாம்பார் டேங்குகள், வெட்டும் பலகைகள், கத்திகள் போன்ற எல்லா சமையல் உபகரணங்களுமே சமைக்கத் தொடங்கும் முன்னர் நீராவியைப் பயன்படுத்தி கிருமிநீக்கப்படுகின்றன. சமையலறைகளில் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல் 304 தரத்தில் செய்யப்பட்டவை மற்றும் அவை உணவைச் சமைக்கவும், கையாளவும் மிகச் சிறந்தவை.
பரலவாக்கிய சமையலறைகளிற்கு சப்பாத்தி தட்டுகள், சாதம் மற்றும் பருப்பிற்கான சமையல் பாத்திரங்கள், சமைத்த மதிய உணவுகளை பள்ளிகளிற்கு கொண்டுசெல்வதற்குரிய பாத்திரங்கள் போன்ற அவசியமான சமையல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. சுகாதார தரநிலைகள் நிறைவு செய்யப்படுகின்றன என்பதை உறுதிசெய்வதற்காக, சமையலறைப் பணியாளர்களிற்கு தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்புப் பயிற்சிகள் ஒழுங்குமுறையில் வழங்கப்படுகின்றன.
தயாரிப்பை நிர்வகிப்பதற்கும் மேற்பார்வை செய்வதற்கும் எல்லா சமையலறைகளிலுமே நன்கு பயிற்சியளிக்கப்பட்ட சமையற்காரர்களையும் தயாரிப்பு மேற்பார்வையாளர்களும் உள்ளனர். உணவின் சரியான தரத்தை உறுதிசெய்வதற்காக குறித்த கால இடைவேளைகளில், சமைக்கும் வெப்பநிலை போன்ற முக்கிய கட்டுப்பாட்டு புள்ளிகள் (க்ரிட்டிகல் கண்ட்ரோல் பாயிண்ட்ஸ் (சி.சி.பிகள்) சரிபார்க்கப்பட்டு, பதிவுசெய்யப்படுகின்றன.
உணவுத் தரம் பேணப்படுவதை உறுதிசெய்வதற்கு, ஒவ்வொரு சமையலறையிலும் தர அதிகாரிகளால் தரச் சோதனை நடத்தப்படுகிறது.
உணவைப் பொதி செய்தல் மற்றும் கொண்டுசெல்லுதல்
சமைத்த உணவானது நீராவியில் கிருமிநீக்கிய பாத்திரங்களில் அடைக்கப்படுகிறது. நாங்கள், ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல் 304 தர பாத்திரங்களில் அடைக்கப்பட்ட உணவை விநியோகிப்பதற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்டு, எமது தனிப்பயனிற்கு ஆக்கப்பட்ட போக்குவரத்து வாகனங்களை உபயோகிக்கிறோம். உணவுகளை ஏற்றும் முன்னர் இந்த வாகனங்கள் நீராவியால் கிருமிநீக்கபடுகின்றன. இந்த வாகனங்கள் வெப்பநிலை இழப்பைக் குறைப்பதற்காக ஒரு பஃப்ட் பாடியையும், மற்றும் பாத்திரங்களை நேராக பிடித்து வைத்திருந்து, குழந்தைகளிற்கு சமைத்த உணவைப் பரிமாறும் வரை அதன் முழுமையான புத்தம் புது தன்மையைப் பேணுவதற்கு ஒரு தேன்கூட்டு அமைப்பையும் பயன்படுத்துகின்றன.
விநியோகம்
பாதையை உகந்ததாக்குவதற்கான லாஜிஸ்டிக் விளக்கப்படமிடுதல், பாதுகாப்பிற்காகவும் சரியான நேர விநியோகத்திற்காகவும் விநியோக வாகனங்களை பின்பற்றித் தடமறிவதற்கு ஜி.பி.ஆர்.எஸ் போன்ற முறைகளும் சமையலறைகளில் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு, அமல்படுத்தப்படுகின்றன.
விநியோகத்திற்கு பின்னான செயல்
உணவின் தரத்தை சீராகப் பேணுவதன் பொருட்டு, உணவை விநியோகம் செய்கையில் தினசரி அடிப்படையில் பள்ளிகளிலிருந்து கருத்துகளைப் பெறுகிறோம். சமையலறையிலுள்ள தர அதிகாரிகள் இக்கருத்தை மதிப்பாய்வு செய்து, உணவின் தரத்தையும் விநியோகத்தையும் முன்னேற்றுவதற்கு பொருத்தமான திருத்த அல்லது மேம்பாட்டு நடவடிக்கைகளைத் தொடங்குகிறார்கள் அல்லது முடுக்கி விடுகிறார்கள். நாங்கள் மதிய உணவுகளைப் பரிமாறுகின்ற வேளைகளில், உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்காக ஒரு ஒழுங்கு முறையில் எல்லா பள்ளிகளிற்கும் ‘செய்ய வேண்டியவை’ மற்றும் ‘செய்யக் கூடாதவை’ என்ற துண்டறிக்கைகளையும் வழங்குகிறோம்.
முக்கிய செயல்கள் மற்றும் அமைப்புகள் மற்றும் அவற்றின் செயல்திறன் ஆகியவற்றைக் கண்காணிப்பதில் தணிக்கை மற்றும் மறுஆய்வு பொறிமுறைகள் ஒரு முக்கிய பங்கை ஆற்றுகின்றன. ஆகவே, எங்களிடம் நிறுவனமாக்கப்பட்ட சிறந்த உற்பத்திச் செயல் (ஜி.எம்.பி) மாதாந்த தணிக்கைகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்த திடீர் தணிக்கைகள் போன்றவை உள்ளன, இவை பெயர்குறிப்பிடுவதற்கான சில மட்டுமே. தர அளவீடுகள் செயல்திறனானது மாதாந்த அடிப்படையில் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. உணவை விநியோகிக்கும் போது நாங்கள் நாளுக்கு நாள் பெறும் கருத்தைத் தவிர, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் விரிவான வாடிக்கையாளர் ஆதரவு கருத்தாய்வுகள் தர பணியாளரால் நடத்தப்படுகின்றன. சான்றளிக்கப்பட்ட சமையலறைகளில், தரம் மற்றும் எஃப்.எஸ்.எம்.எஸ் மேலாளர்களால் தலைமை தாங்கப்பட்டு தகுதியான உட்புற தணிக்கையாளர்களால் ஐ.எஸ்.ஓ 22000 உட்புற தணிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் எங்கள் சான்றளிப்பு அமைப்பானது ஆண்டிற்கு இரு தடவைகள் கண்காணிப்புத் தணிக்கைகளைச் செய்கின்றன. அதனதன் எல்லா தணிக்கைகளிலிருந்தும் கிடைக்கும் தரவு மதிப்பாய்வு செய்யப்பட்டு, பொருத்தமான மேம்பாட்டு அல்லது திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. எல்லா நடவடிக்கைகளும் செயற்திறமான அமலாக்கம் வரை தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.
தொடர்ச்சியான மேம்பாட்டு முறைகள்
நாங்கள் வழங்கும் மதிய உணவுகளின் தரத்தை நீடித்து நிலைத்து வைத்திருப்பதன் மூலம் எங்கள் சேவையைப் பேணுவதையும் சிறப்பாக்குவதையும் இலக்காகக் கொண்டிருப்பதால், அங்கு தொடர் மேம்பாட்டிற்கான தேவை உள்ளது. நாங்கள் பல்வேறு செயல்களின் செயல்திறனை தொடர்ச்சியாக மேம்படுத்த வேண்டும், ஆகவே தான் மேம்பாட்டின் ஒவ்வொரு சுழற்சியும் அடுத்த கட்ட சாதனைக்கு வழிவகுக்கும். நாங்கள் ஒரு முழுமையான அணுகுமுறையை ஏற்றுக்கொண்டு, ‘AkshayaPragathi’ என அழைக்கப்படும் ஒரு திட்டத்தை வடிவமைத்தோம். எங்கள் திட்டத்தின் ஒரு பாகமாக, இந்த முயற்சிகளின் பாகமாக ஒவ்வொரு உறுப்பினரும் இருப்பதை உறுதிசெய்யவும், அவ்வாறு இருக்குமாறு ஆக்கவும் நாம் கைஸான், சி.ஐ ப்ராஜெக்ட்ஸ் மற்றும் சிக்ஸ் சிக்மா செயல்முறைகளை ஏற்றுக்கொண்டு, அமல்படுத்துகிறோம்.
பயிற்சி என்பது தொடர் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு இன்றியமையாத பாகம் ஆகும். 2012-13 நிதியாண்டில், 6,000 இற்கும் அதிக மனித மணிநேரங்களிற்கு எல்லா இருப்பிடங்களிலும் உள்ள சமையலறைப் பணியாளர்களிற்கான 5எஸ், ஜி.எம்.பி, லீன் மற்றும் கைஸான், மற்றும் ஐ.எஸ்.ஓ 22000 விழிப்புணர்வு ஆகியவற்றில் பயிற்சி வழங்கப்பட்டது. தரத் துறையானது 2013-14 நிதியாண்டில் இதேபோன்ற தலைப்புகளில் 15,000 மனித மணிநேர பயிற்சியை நடத்த எண்ணுகிறது.
The Akshaya Patra Foundation © 2017 Website Designed & Maintenance By Creative Yogi