திட்ட அமலாக்கம்
மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தும் போது, மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுகின்றன. திட்டத்தை செயல்படுத்துவதற்காக மாநில அரசுகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை மத்தி அரசு வழங்குகிறது. எனினும், மத்தி அரசு வழிகாட்டுதல்களில் இருந்து வேறுபட்ட வழிகாட்டுதல்களை வழங்கிய சில மாநில அரசுகளும் உள்ளன.
திட்டத்தை கண்காணிப்பதற்காக, இதன் தாக்கத்தை மதிப்பிடுவதற்காக மற்றும் மத்திய மாநில அரசுகளுக்கு கொள்கை ஆலோசனையை வழங்குவதற்காக ஒரு தேசிய வழிநடத்தல் மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மானியங்கள் வடிவிலான மத்திய உதவியானது திட்ட ஒப்புதல் குழுவினால் குழுவின் வருடாந்திரப் பணித் திட்டம் சமர்பிக்கப்பட்தும் வெளியிடப்படுகிறது.
திட்டத்தைக் கண்காணிப்பதற்காக மாநில அளவிலும் வழிநடத்தல் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. ஒரு இணைப்புத் துறை பொறுப்பினை எடுத்துக்கொள்வதற்கு அதிகாரமளிக்கப்படுகிறது. செயல்முறைப்படுத்தும் பிரிவுகள் இணைப்புத் துறையினால் ஏற்படுத்தப்படுகின்றன மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொகுதி மட்த்திலும் திட்டத்தின் ஆற்றல்மிக்க செயல்படுத்தலைக் காண்காணிப்பதற்காக ஒரு அதிகாரி நியமிக்கப்படுகின்றன.
பஞ்சாயத்துகள்/நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தொடக்கக் கல்வி ஒப்படைக்கப்பட்டுள்ளதால் மாநிலங்களில் அவையே திட்டத்திற்கு பொறுப்பாக இருக்கின்றன.
நிதிகளின் பாய்வு
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் என்பது இந்திய அரசின் சார்பாக நிதி ஒப்புதல்கள் மற்றும் உணவு தானிய வினியோகத்தை (மத்திய உதவி) மாநிலங்களுக்கு வழங்கும் ஒரு இணைப்பு முகமையாகும்.
தானியங்களின் பாய்வு
படங்களுக்கான ஆதாரம் : திட்டக்குழு, இந்திய அரசு. of India
The Akshaya Patra Foundation © 2017 Website Designed & Maintenance By Creative Yogi