Akshaya Patra — பிற முன் முயற்சிகள்

பள்ளிகளிலிருந்தான முழு அளவான வரவேற்பு;   மதிய உணவுத் திட்டத்தின் கீழ் இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளுடான கூட்டாண்மை மற்று எங்களின் இரக்க குணாமுள்ள கொடையாளர்களின் நடுநிலையான ஆதரவு எங்களின் சென்றடைதலை ஒரு இடத்தில் 1,500 குழந்தைகளிலிருந்து இந்தியாவெங்கிலும் ஒன்பது மாநிலங்களில் 33 இடங்களிலிருக்கும் 1.6 மில்லியன் குழந்தைகளாக அதிகரிக்க உதவியுள்ளது. 13 ஆண்டு காலத்திற்குள் ஐந்து அரசுப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு உணவளிப்பதிலிருந்து 13,839க்கும் அதிகமான அரசுப் பள்ளிகளுக்கு எங்களின் சேவையை அதிகரித்துள்ளது.

வழக்கமான மதிய உணவுத் திட்டம் தவிர, Akshaya Patra பிற உணவளித்தல் முன் முயற்சிகளையும் எடுத்துக் கொண்டுள்ளது, அவையாவன:

  • ஆங்கன்வாடி உணவளித்தல்

  • கருத்தரித்துள்ள மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு உணவளித்தல்

  • சிறப்புப் பள்ளிகளில் உணவளிக்கும் திட்டங்கள்

  • பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ளவர்களுக்கு மானிய விலையில் உணவளித்தல்

  • தப்பியோடிய குழந்தைகளிற்கு உணவளித்தல்

  • முதியோர் இல்லங்களுக்கு உணவளித்தல்

  • வீடற்றவர்களுக்கு உணவளித்தல்

  • பேரிடர் நிவாரணம்

மேலுள்ள முன்முயற்சிகள் தவிர, இவை போன்ற பிற சமூக முன்முயற்சிகளிலும் நிறுவனம் ஈடுபட்டுள்ளது:

  • பாடங்களில் கல்விக்கூடத்துக்கு வெளியே தனிப்பயிற்சி

  • வாழ்க்கைத் திறன்கள் திட்டங்கள்

  • சமுதாய சுகாதார முகாம்கள்

  • கல்வி ஊக்கத்தொகைத் திட்டங்கள்

  • உடல்நலச் சோதனை முகாம்கள்

2020 இற்கு முன் 5 மில்லியன் குழந்தைகளைச் சென்றடைவதற்கான தனது நோக்கத்தை உணர்ந்து கொள்வதற்கு Akshaya Patra கடமைப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைவதன் மூலம் நாங்கள் “இந்தியாவிலுள்ள சிறுவர்கள் எவருமே பசி காரணமாக கல்வியை இழந்துவிடக் கூடாது” என்கிற எங்களின் நோக்கத்தினை அடைவதற்கு நெருக்கமாக நகருவோம். எங்கள் பங்குதாரர்களின் தொடர்ச்சியான ஆதரவுடன், இந்தியாவில், வகுப்பறைப் பசியைப் போக்குவதற்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்கினை எங்களால் ஆற்ற முடியும் என்று நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

Share this post

Note : "This site is best viewed in IE 9 and above, Firefox and Chrome"

`