ஒளிவு மறைவின்மை
ஒளிவு மறைவின்மை என்பது நம்பிக்கைக்கும் நம்பத்தகுந்த தன்மைக்கும் முக்கியமாகும். Akshaya Patra ஃபௌண்டேஷன் அதன் அனைத்துச் செயற்பாடுகளிலும் முழுமையான வெளிப்படையானத்தன்மையைக் கடைப்பிடிப்பதில் நம்பிக்கை வைக்கிறது. இத்தத்துவத்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதில் நாங்கள் பன்னாட்டு நிதிசார் அறிக்கையிடுதல் நியமங்களுடன் (ஐ.எஃப்.ஆர்.எஸ்) இணங்கி நடக்கிறோம். 2008-09 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐ.எஃப்.ஆர்.எஸ் அறிக்கைப்படுத்தல் நிறுவனத்தின் பங்குதாரர்கள் இடையே நம்பிக்கையை வளர்ப்பதில் கணிசமான அளவு பங்களித்துள்ளது.
நாங்கள் இந்திய பட்டயக் கணக்காளர்கள் கழகம் (ஐ.சி.ஏ.ஐ) வெளியீட்டுள்ள இந்திய கணக்கியல் நியமங்களுடன் இணங்கியும் நடக்கிறோம். விளக்கக்காட்சிகளின் தரத்தை உயர்த்துவதற்கு, புதிதாக வரும் கணக்கியல் மற்றும் நிதிசார் அறிக்கைப்படுத்தல் நியமங்களை ஏற்றுக்கொள்வதில் எங்கள் நிறுவனம் முன்னணி நிலையில் தொடர்ந்து இருந்து வருகிறது. ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும், நிறுவனம் தனது ஆண்டறிக்கையை நிதித் தணிக்கைகள் மற்றும் கூற்றுகளுடன் சேர்த்து வெளியிட்டு, அதை தனது பங்குதாரர்கள் அனைவருக்கும் கிடைக்க செய்கிறது.
ஒளிவு மறைவின்மை மீது தொடர்ச்சியாகவும் கடுமையாகவும் கவனம் செலுத்தியதால், அது பின்வருவன போன்ற விருதுகளையும் அங்கீகாரங்களையும் கிடைக்கச் செய்துள்ளது.
-
தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளிற்கு ”நிதி அறிக்கையிடலில் மேன்மை” (எக்சலன்ஸ் இன் ஃபைனான்சியல் ரிப்போர்ட்டிங்) இற்கான ஐ.சி.ஏ.ஐ தங்கக் கேடய விருது, இது ஐ.சி.ஏ.ஐ ஹால் ஒஃப் ஃபேமில் ஃபௌண்டேஷனின் பதிவைத் தொடங்கிவைத்தது.
-
கணக்காளர்களின் தெற்காசிய கூட்டமைப்பு (எஸ்.ஏ.எஃப்.ஏ) தங்க விருது 2011-12
-
மூன்று ஆண்டுகளிற்கு, என்.ஜி.ஓ வகையில் மிகச்சிறந்த ஆண்டு அறிக்கைக்கான சி.எஸ்.ஓ கூட்டாளர்கள் விருது
-
தொடர்ச்சியாக இரு ஆண்டுகளிற்கு அமெரிக்கன் தகவல்தொடர்புகள் வல்லுநர்களின் லீக் விஷன் விருதில் தங்க விருது
ஆளுகைத் தத்துவத்திற்கும் ஒளிவு மறைவின்மைக் கோட்பாட்டிற்கும் இணங்கி நடக்கும் இந்நிறுவனம் 2013-14 நிதியாண்டிற்கான தனது ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. 2013-2014 ஆண்டறிக்கையின் ஆன்லைன் பதிப்பை தயவுசெய்து பாருங்கள்.
The Akshaya Patra Foundation © 2017 Website Designed & Maintenance By Creative Yogi