தணிக்கைகள் மற்றும் முறைகள் (ஆடிட் மற்றும் சிஸ்டங்கள்)

உள்ளார்ந்தக் கட்டுப்பாடே சிறந்த ஆளுகைக்கான திறவுகோல் என்று நாங்கள் நம்புகிறோம். அதனால்தான், கடுமையான நடைமுறைகளை மேற்கொண்டு, வெளிப்படையானத்தன்மையின் உயர்வான நியமங்களைப் நிறைவுசெய்வதை உறுதிப்படுத்துகிறோம்.


உட்புறக் கட்டுப்பாடுகளின் வினைத்திறத்தை உறுதிசெய்வதற்காகவே நிறுவனம் தனிச்சிறப்பான பட்டயக் கணக்காளர் (சார்ட்டட் அக்கவுண்டண்ட்) நிறுவனங்களை கிளை தணிக்கையாளர்களாக (பிராஞ்ச் ஆடிட்டர்களாக) நியமனம் செய்துள்ளது. இந்த கிளை தணிக்கையாளர்கள் அவர்களிற்குரிய கிளைகளின் தணிக்கை செய்த அறிக்கைகளை, குறிப்பிட்ட கால இடைவெளிகளின் அடிப்படையில் மேலாண்மைக்குச் சமர்ப்பிக்கிறார்கள். இந்த அறிக்கைகள் பின்னர், நிறுவனத்தின் தணிக்கைத் துறையின் ஊடாக தணிக்கைக் குழுவினால் மறுஆய்வு செய்யப்படுகின்றன.


தணிக்கைக் குழு என்பது வினைத்திறமிக்க உள்ளார்ந்தக் கட்டுப்பாட்டுச் சூழலை உருவாக்கும் அறங்காவலர் வாரியத்தின் ஒரு துணைக் குழுவாகும். தணிக்கைக் குழுவின் பின்வரும் அறங்காவலர்கள் அடங்குகின்றனர்:

வி. பாலகிருஷ்ணன் - தலைவர்
ராம்தாஸ்கமாத் - உறுப்பினர்
ராஜ் கொண்டூர் - உறுப்பினர்

 

The Best Way to Make a Difference in the Lives of Others